UNP யின் யானை சின்னத்தில் ஜீவன் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுகிறார்
முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டுள்ளார்.
இ.தொ.கா முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தலைமையிலான கூட்டணியின் கீழ் கட்சியின் பாரம்பரிய யானை சின்னத்தில் போட்டியிடவுள்ளது.