அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கு விதிக்கப்பட்டிருந்த வாழ்நாள் தடை நீக்கம்
அனைத்து விதப் போட்டிகளிலும் தலைவர் பொறுப்பை வகிப்பதற்கு டேவிட் வார்னருக்கு விதிக்கப்பட்டிருந்த வாழ்நாள் தடை நீக்கப்பட்டுள்ளது.
டேவிட் வார்னரின் கோரிக்கைக்கு அமைவாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை இந்த முடிவை அறிவித்துள்ளது.
2018 ஆம் ஆண்டு பந்தை சேதப்படுத்தியதற்காக டேவிட் வார்னருக்கு ஓராண்டு விளையாடுவதற்குத் தடையும், அணித் தலைவராகச் செயற்படுவதற்கு வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டது. எனினும், தற்போது குறித்த தடை நீக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து டேவிட் வார்னர் ஓய்வு பெற்றிருந்தாலும் குறித்த தடை நீக்கம் காரணமாக BBL தொடரில் அணித் தலைவராகச் செயற்படுவதற்கு வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.