Breaking News

தாமரை கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து மாணவி பலி.


 கொழும்பு தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து மாணவியொருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.


சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயின்ற மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சிசிரிவி காணொளியில் குறித்த மாணவி தாமரைக் கேகாபுரத்தின் 29 ஆவது மாடியிலிருந்து விழுவது தெரியவநதுள்ளது.


இந்த மாணவி தாமரை கோபுரத்தில் இருந்து கீழே தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலை செய்துக் கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.


மேலும், தற்போது அந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.